ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது

எப்போதும் அனுமதி வழங்க முடியாது... ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அரசு அந்த ஆலைக்கு சீல் வைத்தது.

அதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் ஆலையை திறப்பதற்கான தடை நீடிக்கும் என தீர்ப்பு வழங்கினார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. சமீபத்தில் அந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டது

வழக்கு முடியும் வரை ஆலையை திறப்பதற்கு அனுமதி கொடுக்க முடியாது என கூறிய நீதிபதிகள் எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஒரு போதும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அனுமதியை கொடுக்க முடியாது என்றும் இடைகாலமாக ஆலையை திறப்பதற்கான எந்த ஒரு அவசியமும் இல்லை என்றும் தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.