மகளிர் பணியகம் வெளியிட்ட தொலைபேசி எண்கள்... சிறுவர்கள், மகளிர் பிரச்னைக்காக

கொழும்பு: தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது மகளிர் பணியகம். இதில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்தன.

இதற்கமைய சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு 1938 என்ற இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யலாம்.

வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் மற்றும் மகளிர் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.