நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது...பிரதமர் மோடி உரையாற்ற துவங்கினார்!

பிரதமர் மோடி அவர்கள் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் இப்போது ஊரடங்கு தளர்வுக்குள் 2.0 (unlock 2.0) நுழைய போகிறோம். இருமல், காய்ச்சல் மற்றும் சளி போன்றவை ஏற்படும் பருவ காலமும் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், கோவிட் -19 க்கு எதிரான போரில் இந்தியா இன்னும் நிலையான சூழ்நிலையில் உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் நடவடிக்கைகளும் நோய் தடுப்பு நடவடிக்கையில் பெரும் பங்கு வகித்தன.

ஊரடங்கு தளர்வு 1.0 வில் சிலர் தங்கள் பாதுகாப்பைக் கைவிடுவதைக் கண்டேன். ஆனால் நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தயவுசெய்து உங்கள் பாதுகாப்பை கைவிட வேண்டாம்.

பி.எம்.ஜி.கே.ஒய் - பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் உள்ள, 20 கோடி கணக்குகள் தங்கள் ஜன தன் கணக்குகளின் வழியாக மொத்தம் 31,000 கோடியைப் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி அவர்கள் தனது உரையாடலின் போது முதல் 10 நிமிடங்களில் இவற்றை தெரிவித்துள்ளார்.