சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்

புதுடெல்லி; சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

வீரசிவாஜி பாசம், பணிவு, பக்தி, நட்பு, அன்பு, வீரம், வாள் பயிற்சி மற்றும் குதிரையேற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். மொகலாயர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் சவால் விட்ட மராட்டிய தேசத்தந்தை சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலமாக கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 395வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவரது துணிச்சலும், நல்லாட்சியும் எங்களை ஊக்குவிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

சத்ரபதி சிவாஜி என்று அழைக்கப்படும் சிவாஜி ராஜே போன்ஸ்லே, முகலாய காலத்தில் 19 பிப்ரவரி 1627 அன்று புனேவில் உள்ள சிவனேரி கோட்டையில் சஹாஜி ஜிஜாபாயின் இளைய மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கற்று சிறந்த வீரனாக விளங்கினார்.