பட்ஜெட் தொடர்பான விளக்கம் அளிக்க 12 இணைய வழி கருத்தரங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி

புதுடில்லி: 12 இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்பு... பட்ஜெட் தொடர்பான விளக்கம் அளிக்க இன்று முதல் மார்ச் 11ந் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை கவனப்படுத்த இந்த 12 அமர்வுகள் நடைபெற உள்ளன.

பசுமை வளர்ச்சி, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, சுற்றுலாத் துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், மகளிர் மேம்பாடு என்ற தனித்தனித் தலைப்புகளில் வெபினார்கள் நடைபெற உள்ளன.

பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சப்தரிஷிகள் என்று ஏழு முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்திய நிலையில், அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் விளக்கக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.