மத்திய பிரதேசம், ராஜஸ்தானுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

புதுடில்லி: பிரதமர் மோடி பயணம்... மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

ஜோத்பூரில் ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம், உயர்கல்வி ஆகிய துறைகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்ளை பிரதமர் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கிறார்.

புதிய விமான நிலைய முனையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

அங்கு சாலை, ரயில், எரிவாயுக் குழாய், வீட்டு வசதி, ஜல் ஜீவன் ஆகிய துறைகள் சார்பில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.