பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக் கொடியை மாற்றியுள்ளார்

இந்தியா: சமூகவலைதள டிபி-யில் தேசியக் கொடியை வைத்த பிரதமர் நரேந்திர மோடி ... பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , வீடுதோறும் தேசியக் கொடி இயக்கத்தின் கீழ், நாம் அனைவரும் நமது சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக் கொடியை வைப்போம்.

நம் தேசத்துக்கும் நமக்குமான பிணைப்பை அதிகரிக்கும் இந்த தனித்துவ முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு தருவோம் என்று பதிவிட்டு உள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த ஜூலை 31 -ஆம் தேதி ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்' இயக்கம் தொடங்கப்படும்.

இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.