இன்று பிரதமர் நரேந்திர மோடி 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்

இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என்று 2 நாள் பயணமாக சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜூலை 7-ம் தேதி சத்தீஸ்கர் மற்றும் உத்தரபிரதேசத்திற்கும், ஜூலை 8-ம் தேதி தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானுக்கும் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

இதையடுத்து இப்பயணத்தின்போது அவர் 4 மாநிலங்களிலும் ரூ.50,000 கோடி மதிப்பிலான சுமார் 50 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று சத்தீஸ்கரில் 6 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 3- வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாஜக திட்டமிட்டு உள்ளது. எனவே, நாட்டில் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் திட்டங்களை விரைந்து முடிக்கதிமிட்டு உள்ளது.