அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை... அமைச்சர் தகவல்

சென்னை: அந்த எண்ணம் எல்லாம் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எதற்காகதெரியுங்களா?


சிதம்பரம் கோவிலை கைப்பற்றும் நோக்கும் இந்துசமய அறநிலையத்துறை செயல்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

சட்டத்திற்கு புறம்பாக சிதம்பரம் கோவில் நிர்வாகம் செயப்பட்டதை கண்டறியப்பட்டால் அறநிலையத் துறையின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டா தொடர்பான வழக்கில் தீட்சிதர் தரப்பு சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டால் அரசு கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும்.

அதுமட்டுமின்றி பழமையான இந்த கோவிலில் இருக்கிற, பாரம்பரிய மன்னர்களால் வழங்கப்பட்ட நகைகள், சொத்துகள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு எங்களது செயல்கள் அமைந்திருக்கிறது. பிற கோவில்களில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதுவே தான் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலிலும் பின்பற்றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.