சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராட்டம் .. மக்கள் அவதி..

தமிழ்நாடு: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இது பொதுமக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சமையல் சிலிண்டர் உடன் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

சேலம் மேற்கு அம்மாசி நகர் பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அந்த பகுதிகளில் குடியிருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிலிருந்த காலி சிலிண்டர் உடன் வீதியில் இறங்கி கண்டனத்தை பதிவு செய்தனர்.

மத்திய அரசு உடனடியாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.ஏழை, எளிய மக்கள் நலன் கருதி சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும்.தற்போது மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.