மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம்

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானி பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படைப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கையின் போது பொது பரிசோதனை மட்டுமே நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் இஎன்டி, கண் பரிசோதனை, கதிரியக்க பரிசோதனை நோயியல் பரிசோதனை ஆகியவை மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாணவர் சேர்க்கைக்கு உளவியல் பரிசோதனை கட்டாயம் என மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து டேராடூனில் பேசிய மருத்துவ கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர், உளவியல் பரிசோதனையின் மூலம் மாணவர்களின் நடத்தை, ஒழுக்கம், இயங்கும் திறன் ஆகியவற்றை மதிப்பிடுவதாகவும் அதன் அடிப்படையில் மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். இதனையடுத்து சில மாணவர்கள் குறித்த காலத்திற்குள் படிப்பை முடிக்காமல் 5,6 ஆண்டுகளாக இளநிலை படிப்பை படித்து வருகின்றனர்.

சிலர் அதிக அழுத்தம் காரணமாக படிப்பை தொடர முடியாமல் சென்று விடுகின்றனர். இதனை தடுக்கக்கூடிய வகையில் மாணவர்களுக்கு உளவியல் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.