கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க .. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் .... கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதனை அடுத்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுத்து,

அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டு உள்ளது.