பாசஞ்சர் ரயிர்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவு

பாசஞ்சர் ரயிர்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம்...நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயிர்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் மட்டும் 36 பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படவுள்ளன. அரக்கோணம்-சேலம், புதுச்சேரி-திருப்பதி, விழுப்புரம்-திருப்பதி, திருச்சி-ராமேஸ்வரம், ஈரோடு-நெல்லை, மதுரை-விழுப்புரம், மயிலாடுதுறை-திண்டுக்கல், நாகர்கோயில்-கோவை, கோவை-நாகர்கோயில் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுகின்றன.

எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படுவதால் 30 முதல் 60 நிமிடங்கள் பயண நேரம் குறையுமே தவிர மற்றபடி, சிறிய ரயில் நிலையங்கள் பலவற்றில் ரயில்கள் நிற்காது என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் பேசஞ்சர் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய், எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய். இதனால் கட்டண உயர்வும் ஏற்படும் என்பதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.