மீண்டும் ஜி ஜின்பிங் தேர்வு... சீன கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளராக அறிவிப்பு

சீனா: மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்... சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு தொடங்கி நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 2,296 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து 205 முழுநேர உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் என 376 பேர் கொண்ட மத்திய குழுவை தேர்வு செய்தனர்.

இந்த மத்திய குழு அதிகாரப் பலம் கொண்ட 7 பொலியூட் பியூரோ உறுப்பினர்களை தேர்வு செய்யும். இவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். பொதுச் செயலாளராக வரும் நபர் தான் சீன நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

முன்னதாக மத்திய குழு சார்பில் தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் பொதுச்செயலாளர் பதவிக்கு முன் மொழியப்பட்டார். இதனௌத் தொடர்ந்து இன்று கூடிய பொலியூட் பியூரோ உறுப்பினர்கள் ஜி ஜின்பிங்கை பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். இதன்மூலம் அவர் 3வது முறையாக சீன நாட்டின் அதிபராக பதவி வகிக்க உள்ளார்.