தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க கோரி அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் கடந்த 2021- ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 – ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, நிதிநிலை சரிவு உள்ளிட்ட காரணங்களால் ஓய்வூதியதாரர்களுக்கு உரிய பலன் பலன்களை அரசு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டு 59 -ல் இருந்து 60 ஆக நிர்ணயிக்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு வயது முதிர்வால் கண் பார்வை கோளாறு மற்றும் பிற உடல்நலன் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனால் பணி நேரத்தில் பேருந்தை இயக்குவதில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பல ஊழியர்கள் தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றும் செல்கின்றனர். அதனால் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.