மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 234 ஓட்டுநர்கள் ,நடத்துனர்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் வெளியீடு


சென்னை : சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வருகிற அக்டோபர் 31 தேதி மதியம் 2.30 மணிவரை தனியார் மேன்பவர் ஏஜென்சிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனம் 5 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் மற்றும் ஆண்டுக்கு 9 கோடி மேல் டர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இதில் 117 ஓட்டுநர்கள் மற்றும் 117 நடத்துனர்கள் என்று மொத்தம் 234 பேர் தற்காலிக பணியில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்வு செய்பவர்கள் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் 32 பணி மனைகளில் காலியாக உள்ள இடங்களில் பணி அமர்த்தப்படவுள்ளனர்.இவர்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.எப்.போன்ற சலுகைகள் உட்பட மாதம் 22000 சம்பளம் வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே 500 ஓட்டுநர்களை வரலாற்றில் முதன் முறையாக மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பணி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் தற்காலிகமாக பணியாளர்களை தேர்வு செய்ய மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது தொழிற்சங்கங்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.