உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா .. அமர்வுகள் மாற்றியமைப்பு

இந்தியா: நீதிபதிகளுக்கு பேருக்கு கரோனா வழக்குகள் தேக்கமடைவதை தவிர்க்க, அமர்வுகள் மாற்றியமைப்பு ... கரோனா தொற்று பாதிப்பில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் குணமடைந்தார்.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ்,எஸ்.ரவீந்திர பட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் பல நீதிபதிகளின் குடும்பத்தினருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தன்பாலின திருமண வழக்கை, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்த அமர்வில் கடந்த வியாழக்கிழமை வரை விசாரணை நடத்தி வந்த நீதிபதி ரவீந்திர பட்டுக்கு தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், மற்ற 4 நீதிபதிகளும், தங்களுக்கு கரோனா அறிகுறி உள்ளதா என கண்காணித்து கொண்டு வருகின்றனர்.

தன்பாலின திருமண வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தொடர்ந்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், இந்த அமர்வில் 1 நீதிபதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இந்த அமர்வின் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அவசர நிலை காரணமாக நீதிபதி கவுல் நாளை நீதிமன்றத்துக்கு வரமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தேக்கமடைவதை தடுக்க, புதிய 2 அமர்வுகளுக்கு வழக்குகளை தலைமை நீதிபதி மாற்றியுள்ளார்.