இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் என தலாய் லாமாவுக்கு கோரிக்கை

கொழும்பு: தலாய் லாமாவுக்கு கோரிக்கை... கடுமையான பொருளாதார எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் புத்தகாயாவுக்கு பயணம் செய்திருந்த இலங்கையின் முக்கிய பிக்குகள் குழுவினரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். ராமாண்ய மகா சங்கத்தின் பிரதம மதகுரு மாஹூல்வேவே விமல தேரர் உட்பட்டவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்திருந்தனர்.

தலாய் லாமா, இந்தியாவின் புத்தகாயாவுக்கு சென்றமை காரணமாக அங்கு பெரும்பாலானவர்கள் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் அவர் இலங்கைக்கு வரவேண்டும். அவர் இலங்கைக்கு பயணம் செய்தால், அவரை பின்பற்றி பலர் இலங்கைக்கு பயணம் செய்வர்.

இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து நாடு பொருளாதாரத்தில் சிறக்கும் என்று விமல தேரர் உட்பட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.