விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை... வடமாகாணத்தில் உள்ள விசேடதேவைக்குட்பட்ட மாணவர்களிற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் மாவட்டச்செயலகத்தில் இடம்பெற்ற ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கூட்டத்தின் போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”வடமாகாணத்தில் 12000க்கு மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். குறிப்பாக இவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளிலில் இவர்களிற்கு ஏற்றவாறான வசதிவாய்ப்புக்கள் காணப்படவில்லை.

எனவே இதனை கருத்தில் கொண்டு வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் ஒரு கல்வி வலயத்தில் ஒரு பாடசாலை கட்டடம் என்ற ரீதியில் அமைக்க வேண்டும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்திருத்தார்.

இதனையடுத்து இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இது தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரின் ஊடாக இதற்கான தீர்வு எட்டப்படுவதாக தெரிவித்தார்.