ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை

நாமக்கல் : நாமக்கலில் சுமார் 1,100 கோழி பண்ணைகள் உள்ளது. இதில் 6 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. எனவே இதன் மூலம் தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து அண்மையில் உற்பத்தி செலவை விட குறைவான விலைக்கு முட்டையை விற்பனை செய்து வருவதாக கோழி பண்ணையர்கள் தெரிவித்தனர். இதனால் நாங்கள் நஷ்டம் அடைவதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களின் உற்பத்தி செலவுகளுக்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச விலையை முட்டைக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் முட்டை விற்பனையை தொடங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை ஒத்து தற்போது கோழி பண்ணை தொழில் தேக்கமடைந்துள்ளதால் அதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் மாதம் 25 முட்டைகள் விற்பனை செய்யும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.