ஊரடங்கு பகுதியில் உள்ள மத்திய நிலையங்களை மூட தீர்மானம்

மத்திய நிலையங்கள் மூட தீர்மானம்... தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை குறித்த மத்திய நிலையங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்கள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.