ஆகஸ்ட் 21ம் தேதி வரை கனடா- அமெரிக்க எல்லையை மூட தீர்மானம்

எல்லையை மூட தீர்மானம்... கனடா- அமெரிக்க எல்லையை மூடுவதை நீடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவில், எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை, ஜூலை 21ஆம் திகதி காலாவதியாக இருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம், வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் ஓட்டத்திற்கும், தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் எல்லையின் எதிர் பக்கங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் செவிலியர்கள் போன்ற முக்கிய சுகாதாரப் பணியாளர்களுக்கும் விலக்கு அளிக்கிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் எல்லை தாண்டிய வருகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.