பிரிட்டனில் சில்லறை விற்பனை அளவுகள் சரிவை கண்டுள்ளதாக தகவல்

பிரிட்டன்: சில்லறை விற்பனை அளவுகள் கடந்த மாதம் 1.4 சதவீத சரிவைக் கண்டுள்ளது. மேலும் வட்டி அதிகரிப்பின் விளைவாக அரசாங்கச் செலவு 5.8 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்து ஆக 79.3 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சில்லறை விற்பனை சரிவை நோக்கி நகர்வதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன. பொருளாதார வல்லுநர்கள் கணித்த 0.5 சதவீத சரிவை விட இந்த சரிவு மிகவும் மோசமாக இருந்தது. புதிய தரவுகள் அரசாங்கம் கடன் வாங்குகிறது மற்றும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முன்பை விட குறைவாக பொருட்களை கொள்வனவு செய்வதை எடுத்துரைக்கின்றது.


பொதுத்துறை நிகர கடன் கடந்த மாதம் 20 பில்லியன் பவுண்டுகள் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்த்ததை விட 3 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என்று அது தெரிவித்துள்ளது.

வட்டி அதிகரிப்பின் விளைவாக அரசாங்கச் செலவு 5.8 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்து ஆக 79.3 பில்லியன் பவுண்டுகளாக உள்ளது என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கக் கடன் பெறுவது செப்டம்பரில் இரண்டாவது மிக உயர்ந்த பதிவாகும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. பொருளாதார புள்ளியியல் இயக்குனர் டேரன் மோர்கன் கூறுகையில், ராணியின் இறுதிச் சடங்கிற்காக பல கடைகள் மூடப்பட்டிருந்ததால், செப்டம்பரில் வீழ்ச்சி ஏற்பட்டதாக சில்லறை விற்பனையாளர்கள் எங்களிடம் தெரிவித்தனர்’ என கூறினார்.

சில்லறை விற்பனையின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் வீழ்ச்சி காணப்படுவதாகவும், உணவுக் கடைகளில் விற்பனை வீழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.