பெலாரஸ்க்கு அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் அறிவிப்பு

ரஷ்யா: அதிபர் புடின் அதிரடி அறிவிப்பு... பெலாரஸ் நாட்டுக்கு அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார். இது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா போர் தொடுத்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

இதன் விளைவாக, இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் மக்கள் இறந்தனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகளையும் ராணுவ தளவாடங்களையும் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் அடுத்த மாதத்திற்குள் பெலாரஸ் நாட்டுக்கு அணு ஆயுதங்கள் வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடனும் புதின் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி, “ஜூலை மாத தொடக்கத்தில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் முடிக்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.