ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மணிப்பூரில் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் திறப்பு

மணிப்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் பழங்குடியின மக்கள் பிரிவினைவாதம் காரணமாக பலத்த கலவரங்கள் நடந்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து பல ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை, காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் தீவிர நிலை காரணமாக கடந்த மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. தற்போது அங்கு மீண்டும் அமைதி நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவுள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கும் முயற்சிகள் நடந்து கொண்டு வருகிறது.

இதற்கு முன்னதாகவும் பலமுறை பள்ளிகள் திறப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து தற்போது பள்ளி கல்வி இயக்குனரகம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதியான நேற்று புதிய உத்தரவு ஒன்று பிறப்பித்தது.

எனவே அதன்படி வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நிவாரண முகாம்களாக செயல்படும் 28 பள்ளிகள் மட்டும் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.