பழங்கால பனிக்கட்டியின் மாதிரிகளை சேமித்த விஞ்ஞானிகள்

ஆர்க்டிக்: பழங்கால பனிக்கட்டி மாதிரி சேகரிப்பு... ஆர்க்டிக்கில் முகாமிட்டுள்ள விஞ்ஞானிகள், காலநிலை மாற்றத்தால் உருகும் முன்பழங்கால பனிக்கட்டியின் மாதிரிகளை வெற்றிகரமாக சேமித்தனர்.

பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கு இடையே நார்வேயின் ஸ்வால்பார்ட் தீவில் முகாமிட்டுள்ள நார்வே, இத்தாலி, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த 8 விஞ்ஞானிகள், பூமியில் கடந்தகால சுற்றுச்சூழல் நிலைமைகளை பகுப்பாய்வு செய்வதற்கான முக்கியமான பனிக்கட்டியின் மாதிரிகளை ஆய்வு மையத்தில் சேமித்துள்ளனர்.

ஆராய்ச்சிக்காக மூன்று மிகப் பெரிய பனிப்பாறைகளை துளையிட்டு எடுத்து சேமித்து வைத்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் உருகும் முன்பழங்கால பனிக்கட்டியின் மாதிரிகளை வெற்றிகரமாக சேமித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.