60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் .. கேரளா அரசு

கேரளா : கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் ... சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஒரு மாத காலமாகவே கொரோனா தொற்று வேகமெடுத்து கொண்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அதன்படி தற்போது சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து விமான பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இச்சூழலில் மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

இதையடுத்து அப்போது பேசிய முதல்வர் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர்களை தொடர்ந்து இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.