ஓஹியோ மாகாணத்தில் வாகனங்களை முழுமையாக மூடிய பனி

ஓஹியோ: வாகனங்கள் மீது கடும் பனிப்பொழிவு... அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டியில் வீடுகள், சாலைகள் மற்றும் வாகனங்கள் படிப்படியாக பனியால் மூடப்படும் காட்சிகள் டைம் லாப்ஸ் முறையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மற்ற பகுதிகளை போலவே ஓஹியோ மாகாணத்திலும் கடும் பனிப்பொழிவு நிலவுகுறது. சில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சென்றதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பனிப்புயலால் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு வீசி வரும் குளிர்கால பனிப்புயலால் பல்வேறு மாகாணங்கள் ஸ்தம்பித்துள்ளன.

நியூயார்க்கில் கடும் பனிப்புயல் காரணமாக பஃபலோ(Buffalo) நகரில் வீடுகளும், வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பனியால் சூழப்பட்டன. சாலைகளில் பல அடி உயரத்திற்கு குவிந்துள்ள பனியால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.