மகளிர் கட்டணமில்லா பேருந்தில் இதுவரை இத்தனை கோடி முறை பெண்கள் பயணம்

சென்னை: தமிழக முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் பதவி பிரமாணம் அடைந்தவுடன் பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இதில் குறிப்பாக, நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
-
இதனை அடுத்து இந்த திட்டம் கடந்தாண்டு மே 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. எனவே அதன்படி இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.


இத்திட்டத்தின் கீழ் தற்போது நாள்தோறும் லட்சக்கணக்கான மகளிர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் முதல்வர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்தில் இதுவரை 236 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளதாக பெருமிதமாக கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் பெண்கள் தன்னிறைவை அடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.