தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது... கர்ப்பிணி, குழந்தைகளுக்கும் வடகொரியாவில் மரண தண்டனை

பியோங்யாங்: குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மனிதாபிமானமற்ற முறையில் மரண தண்டனை விதிக்கிறது வடகொரியா என்று தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், “வடகொரியா ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது. வளர்ச்சி குன்றிய பெண்களின் கருப்பையை அகற்ற வட கொரியா உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற மதத்தினரை வட கொரியா தூக்கிலிட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் மரண தண்டனை பட்டியலில் குழந்தைகள் இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வடகொரியாவில் இடம்பெற்ற கொடூர மனித உரிமை மீறல்கள் குறித்து நாட்டை விட்டு வெளியேறிய 500க்கும் மேற்பட்ட வடகொரியர்களிடம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரியா புதிர்: வட கொரியா தனது அனைத்து உள்நாட்டு விவகாரங்களையும் இராணுவ ரகசியமாக பாதுகாக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதன் உண்மை நிலையை உலக நாடுகள் அறிந்துகொள்வது எளிதல்ல. ஊடகங்களும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தாலும், அங்குள்ள தொற்று நிலை குறித்த உண்மையான விவரங்கள் உலகுக்குத் தெரியாது.

மேலும், உள்நாட்டில் அணு ஆயுத உற்பத்திக்கு வடகொரியா முன்னுரிமை அளிக்கத் தொடங்கியது. அதன்பிறகு பல நாடுகளில் இருந்து பல்வேறு பொருளாதார தடைகளை சந்தித்து வருகிறது.