வருகிற 10-ம் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

சென்னை:வருகிற 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக அமைச்சர் தெரிவிப்பு ... இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தால் இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.

மேலும் இந்த காய்ச்சல் பாதிப்பு இரு வாரங்கள் வரை இருக்கிறது. அதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை சாப்பிட வேண்டாம் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொசு உற்பத்தியை தடுக்க கவனமுடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவரகள் தெரிவித்துள்ளார்.

மேலும் அது மட்டுமில்லாமல் மாநிலம் முழுவதும் வருகிற மார்ச் 10 -ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.