திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு பிப். 5ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டால் தீயது அகன்று நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதையடுத்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணம் - திருத்தணி இடையே இன்று முதல் 6-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அரக்கோணத்திலிருந்து காலை 10:22 , பகல் 1 மணி மற்றும் பிற்பகல் 2:50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதேபோல் திருத்தணியில் இருந்து மறுமார்க்கமாக காலை 11:15 , பகல் 1 50 மற்றும் பிற்பகல் 3:40 ஆகிய நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது.