ஈரானுடன் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட இலங்கை தீர்மானம்

தேயிலை வர்த்தகம் தொடர்பான தீர்மானம்... வேளாண்மை தொடர்பான உபகரணங்களுக்கு ஈடாக ஈரானுடன் தேயிலை வர்த்தகத்தில் ஈடுபட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் ஈரானிய தூதுவருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஈரானில் இலங்கை தேயிலைக்கு உள்ள கேள்வி மற்றும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படாத விவசாய உபகரணங்களை பரிமாறிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஈரானிய அரசாங்கம் இங்கு தொழிற்பயிற்சி நிறுவனங்களை நிறுவ உதவுவதோடு, நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் மகாபொல உதவித்தொகை நிதியில் வைப்பிலடவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பர் ஒப் கொமர்ஸ், தேயிலை வாரியம் மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு ஒப்பந்மும் கையெழுத்திடப்படவுள்ளது.