இலங்கையில் டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாரத்தின் 5 நாட்களும் வகுப்பு நடத்த உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு

இலங்கை: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது அதானல் மக்கள் அன்றாட செலவுளை சரி செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நேரத்தில் அந்நாட்டு பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது.

இதையடுத்து தற்போது ஓரளவு நிலைமை சீராகி வந்துள்ளதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது.இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் டிசம்பர் மாதம் வரை விடுமுறை இன்றி வாரத்தின் 5 நாட்களும் வகுப்புகளை நடத்த உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்கள் பள்ளிகள் சென்று வருவதில் போக்குவரத்து பிரச்சனைகள் ஏதும் இல்லை. அவ்வாறு ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை போக்குவரத்துறையிடம் கலந்துரையாடி தீர்வு காணப்படும்.தற்போது கொரோனா பாதிப்புகளும் குறைந்து வருவதால் சுகாதாரத்துறை அமைச்சகம் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை

அதனால் டிசம்பர் வரை வாரத்தில் 5 நாட்களும் வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினால் அதன்படி அதனை பள்ளிகள் கடைபிடிக்கும் எனவும் கூறியுள்ளார்.