போக்குவரத்து துறையில் காலியாகவுள்ள பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ..போக்குவரத்து துறை அமைச்சர்


சென்னை: தமிழக போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள 1,619 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இதில் முதற்கட்டமாக, 685 ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்து உள்ளார்.


இதற்கு இடையே, கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகங்களில் பணி வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு வாகன பராமரிப்பு ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது பற்றி ஆராய வேண்டும் என்றும் அமைச்சர் அறிவித்து உள்ளார்.

எனவே அதன் தொடர்ச்சியாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை, ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.