ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு ,கம்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டுக்குரிய வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தாக்கல் செய்தார். இவர் தமது உரையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதனை அடுத்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு மற்றும் கம்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட பயிர்களை அதிகமாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துடன் ரூ.230 கோடி நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 6.77 லட்சம் விவசாயிகளுக்கு அரசு சார்பாக ரூ.783 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.