காரைக்காலில் சாலை விபத்துகளை குறைக்க, கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

காரைக்கால்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாலை விபத்துகளை குறைக்க, கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதிலும் குறிப்பாக இரு சக்கரத்தில் செல்வோர் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்றும், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும்அடிக்கடி போலீசார் எச்சரித்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் காரைக்காலில் செல்போன் பேசிக் கொண்டே 2 சக்கர வாகனத்தில் செல்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதையடுத்து இது பற்றி மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் கூறுகையில், 2 சக்கர வாகனத்தில் செல்லும் போது செல்போன் பேசுவது மூலமாக ஏற்படும் கவன சிதறல் தான் அதிகமான விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது.

அதனால் செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவோரை பொதுமக்கள் பார்த்தால், உடனே புகைப்படம், வீடியோ எடுத்து 9489205307 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பலாம். அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.