தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

மும்பை தாராவி பகுதி ஆசியாவிலே மிகப்பெரிய குடிசைப்பகுதியாகும். தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. நெருக்கடி பகுதியான தாராவி பகுதியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

இந்நிலையில், நேற்று அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பிறகு அங்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ தாண்டி உள்ளது.

இதனால் தற்போது தாராவியில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 415 ஆக அதிகரித்து உள்ளது. தாராவியில் இதுவரை 2 ஆயிரத்து 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல தாதரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

தாதரில் நேற்று மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல மாகிமில் 17 பேருக்கு வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 1,420 ஆக உயர்ந்துள்ளது.