பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஸ்டாலின் அறிவித்த அறிக்கை..

தமிழ்நாடு: மிழக அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.. அதன்படி இலவச பேருந்துகளின் நிறத்தை மாற்றி அமைத்து வருகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே பெண்களுக்கான இலவச பஸ் பயணத்துக்கு கையெழுத்து போட்டார்.மற்றொருபுறம் மற்ற துறைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்வது போல, போக்குவரத்து துறையிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்.

அப்படி ஆய்வு மேற்கொள்ளும்போதெல்லாம், பஸ்ஸில் இருக்கும் பயணிகளிடம் பஸ்கள் சரியான நேரத்தில் வருகிறதா? போதுமான வசதி உள்ளதா? கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா?பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா? என்று அக்கறையுடன் கேட்டு செல்வார்.

இலவச பேருந்து, அமோக வரவேற்பை திமுக அரசுக்கு பெற்று தந்தது. இதனால் பயன் பெறும், பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.அதன் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு நகர பேருந்துகளும் முழுமையாக இயக்கப்பட்டும் வருகின்றன.

ஆனால் ஒரே ஒரு சிரமம் இதில் காணப்பட்டது.தமிழ்நாட்டில் மாநகர அரசு பேருந்துகள் அனைத்தும் ஒரே கலரில் இயங்குவதால் பெண்களுக்கு இலவச கட்டண பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.சிலசமயங்களில் சில அரசு பஸ் கண்டக்டர்கள், பெண்களுக்கும் இடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டுவிடும்.. இந்த பிரச்சனைக்குதான் தமிழக அரசு, சூப்பர் தீர்வு ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பிங்க் கலர் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, பிங்க் கலரை, பஸ்ஸின் முன் மற்றும் பின் பகுதியில் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.