பொறியியல் மாணவர்கள் கவனத்திற்கு .. வரும் 20ம் தேதி துணை கலந்தாய்வு

சென்னை:நவ.20 துணை கலந்தாய்வு ... தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்,சுயநிதி கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகள் கடந்த ஜூலை மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதை தொடர்ந்து கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பொது பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. நேற்றுடன் 4ம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது.


இதையடுத்து இந்த நிலையில் ஏற்கனவே கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏதேனும் காரணத்தால் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையிலும் காலியிடங்களை நிரப்பும் வகையிலும் வரும் 20ம் தேதி துணை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் நவ.18ம் தேதி வெளியாகும். இந்த கலந்தாய்வில் பொது பாடப்பிரிவு, தொழிற்கல்வி ஆகிய பாடப் பிரிவு மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.