விபத்துக்களை தடுக்கும் விதமாக ஸ்பீடு ரேடார் கன் பொருத்திய கண்காணிப்பு கேமராக்கள் தொடக்கம்

கோவை: ஸ்பீடு ரேடார் கன்... கோவை மாநகரில் விபத்துகளை தடுக்கும் விதமாக, 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களை கண்டறிய, ஸ்பீடு ரேடார் கன் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பயன்பாட்டை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக இந்த கேமராக்கள் அவினாசி சாலை, சத்தி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக அபராதம் விதித்து இ-செலான் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கேமராக்கள் மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்களின் வேகத்தை கண்டறிய முடியும் என்றும் இரவு நேரங்களில் கூட வாகன எண்ணை பதிவு செய்ய முடியும் என்றும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.