நீர்மூழ்கி கப்பல்களை கொண்ட படையை உருவாக்க தைவான் திட்டம்

நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்க திட்டம்... சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் நீர்மூழ்கி கப்பல்கள் கொண்ட படையை உருவாக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தைவானை தனிநாடாக அங்கீகரிக்காமல் இருக்கும் சீனா, அந்நாட்டை அடிக்கடி மிரட்டி வருகிறது.

இதையடுத்து, கடல்மார்க்கமாக சீனா ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டாலோ, கடற்படை மூலம் முற்றுகையிட்டாலோ, அதை எதிர்கொள்ள நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க தைவான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கோசியங் பகுதியில் 8 நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் முதல் நீர்மூழ்கி கப்பல் கட்டுமான பணி கடந்த மாதம் தொடங்கி விட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த கப்பல்கள், டீசல்-எலெக்ட்ரிக் சக்தியில் இயங்க கூடியது எனவும், அணுசக்தி நீர்மூழ்கியுடன் ஒப்பிடுகையில் குறைவான சப்தமே எழும் எனவும் கூறப்படுகிறது.