டெக்ஸாஸ் ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு... மக்களை வெளியேற அறிவுறுத்தல்

டெக்ஸாஸ்: ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு... அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதையடுத்து அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள் கதிர்வீச்சு தாக்குதலைத் தவிர்க்க வீடுகளை காலி செய்து ஒருமைல் தொலைவுக்கு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று இருக்கும்படியும் , கார்களில் ஏசிக்களை நிறுத்தும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கும் படங்களை அப்பகுதி மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

பாதிப்பைத் தவிர்க்க ஒரு தனியார் பள்ளி மூடப்பட்டது.ஒரு நெடுஞ்சாலை மூடப்பட்டது. இந்த ரசாயன ஆலை வெடி விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன என்று இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை