அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்துகிறது .. முதல்வர்

சென்னை: அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்துகிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் CREDAI ரியல் எஸ்டேட் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார்.

இதையடுத்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் எனவும், தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே அரசின் விருப்பம் எனவும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழ்நாடு திகழ்வதாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் எனவும், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை கிரெயார் கட்டித்தர வேண்டும் எனவும், சென்னை பெருநகரில் ஆன்லைனில் வீட்டுமனை அங்கீகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதனை அடுத்து சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிய தொழில் நிறுவனங்கள் வருகை போன்றவற்றால் வாழ்விடங்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது என அவர் தெரிவித்தார்.