2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார் முதலமைச்சர்

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாகவே அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ம் தேதி, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு முதற்கட்ட பயணத்தை நிறைவு செய்தார். இந்த நிலையில், நாமக்கல்லில் இன்று 2-வது கட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக மக்களுக்கு புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

மேலும் முதலமைச்சர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாமக்கல் மாவட்டம் ராசியான மாவட்டம். பொங்கல் பரிசு டோக்கனை அ.தி.மு.க. வினர் வழங்குவதாக ஸ்டாலின் கூறியது பொய்யான குற்றச்சாட்டு. ஏழை, எளிய மக்களை காக்கும் தமிழக அரசுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கூறினார்.