பிடித்த கால்பந்து அணிகளின் ஜெர்சியை அணிந்து வந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி

திருவனந்தபுரம்: வித்தியாசமாக மணமேடைக்கு வந்த திருமண ஜோடி... கத்தாரில் நடைபெற்று வந்த உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 18ம் தேதி அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதிய இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

கடந்த 18ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த இறுதிப்போட்டியில் நடந்த திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இஸ்ரோவில் விஞ்ஞானியான ராதாகிருஷ்ணன் மகன் சச்சின் கம்மத்துக்கும், கொச்சியைச் சேர்ந்த ஆதிராவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 18ம் தேதி எர்ணாகுளத்தில் திருமணம் நடந்தது.

புதுமணத் தம்பதி இருவரும் தீவிர கால்பந்து ரசிகர்கள். மணமகன் சச்சின் கம்மத் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். மணமகள் ஆதிரா பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் ரசிகை. திருமண நாளில் அர்ஜென்டினா-பிரான்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றதால், மணமகனும், மணமகளும் தங்களுக்குப் பிடித்த அணியின் சீருடையை (ஜெர்சி) மேலாடையாகத் திருமணப் பட்டைகளுடன் அணிந்து மேடைக்கு வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது அனைவரையும் கவர்ந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.