வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடைபெறும். ஜனவரி மாதம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் . அந்த வகையில் இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணி இன்று தொடங்குகிறது. 17 வயது முடிந்ததுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இதனை அடுத்து 18 வயது ஆனதும் தானாக பெயர் சேர்க்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். ஜனவரியில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் தொடக்கமாக தற்போதைய நிலவரப்படி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

மாவட்ட அளவிலான பட்டியலை அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வெளியிடுகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் ,சேர்க்கவும் ,திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவோ தேர்தல் ஆணையத்தின் என் வி எஸ் பி இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

இதையடுத்து வருகிற 4-ம் தேதி, 5-ம் தேதி 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி களில் தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன. பெயர் சேர்ப்பு , திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு டிசம்பர் 9ம் தேதி வரை இந்த பணி தொடர்ந்து நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் ஆனது ஜனவரி 5ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.