அவசர கால நிதி அதிகாரத்தை முப்படைகளுக்கும் வழங்கிய மத்திய அரசு

முப்படைகளுக்கும் அதிகாரம்... 500 கோடி ரூபாய் வரையிலான ஆயுதங்களை படைகளே வாங்குவதற்கான அவசர கால நிதி அதிகாரத்தை, மத்திய அரசு முப்படைகளுக்கும் வழங்கியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, எல்லையில் அவர்களது நடவடிக்கைக்கு தகுந்த பதிலடி கொடுக்குமாறு முப்படைகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் படைகளை வலுப்படுத்துவதற்காக குறுகிய காலத்தில் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தளவாடங்களை வாங்க வசதியாக, முப்படைகளுக்கும் அவசரகால நிதி அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், ஆயுதங்கள் வாங்குவதில் தாமதத்துக்கு வழிவகுக்கும், சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.