தலைவன் இருக்கின்றான் படத்தின் புது அப்டேட்!

கமல்ஹாசன் தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியன்-2 படத்திற்கு பின் அவர் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் நடிக்கிறார். இது தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது. முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கமல்ஹாசன் கையால் கொல்லப்படும் நாசரின் மகனாக விஜய்சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது. நகைச்சுவை வேடத்துக்கு வடிவேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் கதாநாயகியாக நடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் 2 கதாநாயகிகள் உள்ளதாகவும், அதற்கு பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.