உத்தரகாண்ட் மாநில அரசு, “உணவு தானிய ஏடிஎம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்பு

உத்தரகாண்ட்: இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ரேஷன் பொருட்களை மக்கள் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதனை தவிர்ப்பதற்கா உத்தரகாண்ட் மாநில அரசு, புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்கும் விதத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மலிவான விலையில் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போழுது ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன்காரணமாக அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. அதனால் ரேஷன் கார்டுதாரர்கள் உணவு பொருட்களை பெற நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையிக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும், ரேஷன் கடைகளில் சரியான எடையில் உணவு பொருட்களை வழங்கப்படுவதில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதனால், , ரேஷன் கடைகளில் இதனை தவிர்க்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலம் அரசு, “உணவு தானிய ஏடிஎம் திட்டம்” என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இப்புதிய திட்டத்தின்படி தேவைப்படும்போது ஏடிஎம்களில் பணத்தை எடுப்பது போன்று இனி தானியங்களை பெற முடியும் என்றும் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நின்று காத்திருந்து ரேஷன் பொருட்களை பெற வேண்டியதில்லை என்று மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.